கஞ்சி ஊத்த ஆள் இல்ல - கோட்டாட்சியரிடம் கண்ணீர் விட்ட 94 வயது மூதாட்டி

 


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள மீஞ்சூரில் 8 பிள்ளைகளைப் பெற்ற  94 வயது மூதாட்டி வாழ வழியில்லை என நடவடிக்கை எடுக்கக்கோரி மூத்த மகன் மீது பரபரப்பு புகார்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர்  94 வயது மூதாட்டி அலமேலு.  இவரது கணவர் மகாதேவன் என்பவர்  இறந்த நிலையில் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தனது கணவர் கட்டி வைத்துள்ள கடை மற்றும் வீட்டினை  வாடகை விட்டு அதில் கிடைக்கும் பணத்தின் மூலம் தனது வாழ்க்கையை  நடத்தி வந்துள்ளார்.

வீடு மற்றும் குடோனை வாடகைக்கு விடுவதை அவரது முத்த மகன் ஏழுமலை என்பவர் தடுத்து வந்துள்ளார். இதனையடுத்து தனக்கு  ஐந்து மகன்கள் மூன்று மகள்கள் என 8 பேர் உள்ள நிலையில் போதிய வருமானம் இல்லாததால் உண்பதற்கும் உடல் நிலையை கவனிக்க முடியாமலும்வாழ்வதற்கு முடியாத நிலையில் உள்ளேன்.

எனது வீடு மற்றும் குடோனை என் மூத்த மகன் ஏழுமலை என்பவர் வாடகைக்கு விடாமல்  தடுப்பதாக மீஞ்சூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . காவல்துறையினர்  நடவடிக்கை எடுக்கவில்லை என மூதாட்டி குற்றஞ்சாட்டுகிறார்.

இந்நிலையில் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் தனக்கு உரிய நியாயம் கிடைக்க பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் செல்வத்திடம் மனு அளித்துள்ளார். 94 வயது மூதாட்டி எட்டு பிள்ளைகளை பெற்றும் தனக்கு வாழ்வதற்கு வழி இல்லை  நடவடிக்கை எடுக்க  கோரிக்கை  மனு அளித்துள்ள சம்பவம் மனதை உருக்கும் விதமாக இருந்தது.-திருவள்ளூர் செய்தியாளர் - பார்த்தசாரதி

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்