சென்னையில் 89,939 வழக்குகள்: 68,665 வாகனங்கள் பறிமுதல்!

 


கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 10.5.2021 முதல் 24.5.2021 வரையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப் படுத்தும் தீவிர நடவடிக்கையாக, 24.5.2021 காலை முதல் 31.5.2021 வரை தளர்வுகளில்லா முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு, 31.5.2021 முதல் 07.6.2021 வரை தளர்வுகளில்லாத முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவித்தது.

இதையடுத்து, சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், முறையான முழு ஊரடங்கு பணிகளை தீவிரபடுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 எல்லை வாகன தணிக்கை சாவடிகள் மற்றும் அனைத்து காவல் நிலைய எல்லைகள் செக்டார்களாக வகைப் படுத்தி உரிய சாலை தடுப்புகள் மற்றும் வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

மிக அத்தியாவசிய தேவைக்காக பொதுமக்கள் செல்ல இ-பதிவு சான்று கட்டாயமாக்கப்பட்டு, இ-பதிவு வைத்திராத பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி சென்னையில் கடந்த 14-5-2021 முதல் 6-6-2021 வரை கொரோனா ஊரடங்கை மீறியதாக 89,939 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 14-5-2021 முதல் 6-6-2021 வரை 68,665 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
‘நீ செத்துப் போ.. நா வீடியோ எடுக்கற’ : மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்ததை வீடியோ எடுத்த கணவன்!!!
Image
சிக்னலில் நின்ற பெண்ணிடம் பணம் கேட்ட திருநங்கை: தர மறுத்ததால் ஆபாச பேச்சு…முகம் சுழிக்க வைத்த செயல்..!!
Image
தி.மு.க மூத்த தலைவரை பொதுவெளியில் விமர்சித்த நிதி அமைச்சர் #PTR - உச்சக்கட்டத்தில் உட்கட்சி பூசல்! https://kathir.news/news/-ptr--1204682
Image
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட அவரது ஆதரவாளர்கள் 11 பேர் மீது வழக்கு
Image