சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 65 வயது முதியவர் போக்சோவில் கைது..!

 


கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே குள்ளநரிமேட்டை சேர்ந்த 6 வயது சிறுமி, லாலாபேட்டை காளியம்மன் கோவில் அருகே விளையாடிக்கொண்டிருந்தார்.  அப்போது பிள்ளா பாளையத்தை சேர்ந்த 65 வயது முதியவர் சுந்தரேசன், அந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அருகிலிருந்தவர்கள், சிறுமியின் பெற்றோரை அழைத்து தகவல் தெரிவித்ததும், குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். மேலும் அனைவரும் சேர்ந்து அவரை பிடித்து போலீசார் வசம் ஒப்படைத்தனர். இதனையடுத்து குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


விசாரணையில் அந்த முதியவர் பாலியல் தொல்லை அளித்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் அவரை போக்சோ சட்டத்தில் 65 வயது முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.