உங்கள் பான் எண்ணை: ஆதாருடன் இணைத்து விட்டீர்களா? 5 முக்கிய தகவல்கள் இதோ!

 




நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் காரணமாக, ஆதார் கார்ட் மற்றும் பான் கார்ட் இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்தது. முன்னதாக மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பான், ஆதார் ஆவணங்களும் இணைக்க இப்போது ஒரு மாதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

2018ம் ஆண்டில் ஆதார் அட்டை குறித்து உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்த பின்னர், உங்கள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கும், நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டையைப் பெறுவதற்கும் 12 இலக்க ஆதார் அடையாள எண் கட்டாயமாகிவிட்டது. உங்கள் பான் அட்டை உங்கள் வருமான வரி மற்றும் வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஜூன் 30க்குள் நீங்கள் இரண்டையும் இணைக்கவில்லை என்றால், உங்கள் பான் அட்டை செயல்படாது. மேலும் ரூ .1,000 அபராதம் விதிக்கப்படும்,

1) உங்களிடம் பான் கார்டு இல்லையென்றால் விரைவில் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் ஒரு புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், உங்கள் விண்ணப்ப படிவத்தில் ஆதாr எண்ணை மேற்கோள் காட்டுவது கட்டாயமாகும், ஏனெனில் பான் தேவைப்படும் இடங்களில் உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தலாம். மேலும் பான் மற்றும் ஆதார் எண்கள் ஒன்றுக்கொன்று இன்டர்லிங் ஆக கூடியவை. புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இன்டர்லிங்கிங் தானாகவே செய்யப்படுகிறது.

2) தற்போது பான் கார்டு வைத்திருப்பவர்கள், ஜூன் 30க்குள் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டியது கட்டாயமாகும். இதனை வருமான வரித் துறையின் போர்ட்டலில் அல்லது எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் செய்யப்படலாம். நீங்கள் ஆன்லைனில் இணைப்பதன் மூலம் அதன் விவரத்தை சரிபார்க்கலாம்.

3) வரி செலுத்துவோர் பலர் இன்னும் தங்கள் ஆதாரை, பான் எண்ணுடன் இணைக்கவில்லை, தற்போது இதற்கான காலக்கெடு எட்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. முந்தைய தேதி டிசம்பர் 31, 2019 ஆக இருந்த நிலையில் தற்போது இறுதி தேதியாக ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

4) நீங்கள் வாங்க வேண்டிய பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களுக்கு உங்கள் ஆதார் எண் அவசியம், மேலும் நீங்கள் சொத்து அல்லது வாகனங்களை வாங்கப் போகிறீர்கள் என்றால் கூட தேவைப்படுகிறது என்பதால் பான் எண்ணுடன் இணைக்க மறக்க வேண்டாம்.

5) பான் கார்டையும் ஆதாரையும் இணைப்பதற்கான காலக்கெடு முடிந்ததும், இணைக்கப்படாத அனைத்து பான் கார்டுகளையும் "செயல்படாதவை" என்று வருமான வரித்துறை அறிவிக்க உள்ளது. எனவே நீங்கள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யவோ அல்லது அதை அடையாள ஆதாரமாக எங்கும் பயன்படுத்தவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்