5 திட்டங்களை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

 
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தை ஒட்டி , கரோனா நிவாரணம் 2-ஆவது தவணை ரூ.2,000, 14 மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட 5 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கரோனா நிவாரணத் தொகை 2-ஆவது தவணை ரூ.2 ஆயிரத்துடன், 14 மளிகைப் பொருள்களான கோதுமை மாவு, உப்பு, ரவை தலா 1 கிலோ, சா்க்கரை, உளுத்தம் பருப்பு தலா அரை கிலோ, புளி, கடலை பருப்பு தலா கால் கிலோ, கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள் தலா 100 கிராம், டீதூள் 100 கிராம் பொட்டலம் 2, குளியல் சோப்பு, துணி சோப்பு தலா 1 ஆகிய பொருள்கள் அடங்கிய அடங்கிய பைகளை, அரிசி அட்டைதாரா்களுக்கு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து உங்கள் தொகுதியில் முதல்வர் திட்ட பயனாளிகள் 10 பேருக்கும் நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து 12,959 கோயில்களில் மாத ஊதியமின்றிப் பணிபுரியும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அா்ச்சகா்கள், பூசாரிகள், பணியாளா்களுக்கு கரோனா கால உதவித் தொகையாக ரூ.4,000, மளிகைப் பொருள்கள் அளிக்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

மேலும் பணியின் போது மரணம் அடைந்த முன்களப் பணியாளா்களான பத்திரிகையாளா்கள், மருத்துவா், மருத்துவப் பணியாளா், காவலா், நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி ஆகியவற்றையும் முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
‘நீ செத்துப் போ.. நா வீடியோ எடுக்கற’ : மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்ததை வீடியோ எடுத்த கணவன்!!!
Image
சிக்னலில் நின்ற பெண்ணிடம் பணம் கேட்ட திருநங்கை: தர மறுத்ததால் ஆபாச பேச்சு…முகம் சுழிக்க வைத்த செயல்..!!
Image
தி.மு.க மூத்த தலைவரை பொதுவெளியில் விமர்சித்த நிதி அமைச்சர் #PTR - உச்சக்கட்டத்தில் உட்கட்சி பூசல்! https://kathir.news/news/-ptr--1204682
Image
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட அவரது ஆதரவாளர்கள் 11 பேர் மீது வழக்கு
Image