இருவர் கைது.. “30 பேர் சேர்ந்து கொள்ளையடிப்போம்” - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

 


தமிழ்நாடு முழுவதும் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் மையங்களை குறிவைத்து நூதன முறையில் ரூபாய் ஒரு கோடி வரை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து எஸ்.பி.ஐ வங்கி மேலாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து, வங்கி கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர். இதில் சென்னையில் மட்டும் 15 வங்கி ஏ.டி.எம்-களில் 50 லட்சம் ரூவாய் வரை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து சென்னை போலிஸார் ஹரியானா சென்று விசாரணை நடத்தினர். அப்போது, முக்கிய குற்றவாளி அமீர் என்பவனை கைது செய்தனர்.

இதையடுத்து போலிஸார் அமீரிடம் நடத்திய விசாரணையில், ஆறு இடங்களில் நண்பர் வீரேந்தருடன் சேர்ந்து வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாகவும், கொள்ளையடித்த பணத்தை ஒரு வங்கி கணக்கில் செலுத்தியதாகவும், அமீர் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மற்றொரு குற்றவாளியான வீரேந்தரை போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் பல அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகியுள்ளன.

அதாவது, ஹரியானா மாநிலம், மேவாட் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு கொள்ளை கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இரண்டு கொள்ளை கூட்டங்களில் 30 பேர் வரை இணைந்து ஏ.எடி.எம் வங்கி கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர்கள் 50 லட்சத்திற்கு மேல் பணம் கொள்ளையடித்தால், நான்கு சக்கர வாகனத்தின் மூலம் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுவிடுவார்கள். அல்லது கொள்ளையடித்த பணத்தை குருவிகளிடம் கொடுத்துவிட்டு விமானங்கள் மூலம் தப்பிச் செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதையும் தமிழ்நாட்டு போலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்