கீழமை நீதிமன்றங்கள் வரும் 28-ம் தேதி முதல் செயல்படும்: உயர் நீதிமன்றம்

 


கொரோனா இரண்டாவது அலை காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை தமிழகம் முழுதும் கீழமை நீதிமன்றங்கள் ஆன்லைனில் மட்டுமே விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதன்படி ஆன்லைன் மூலமாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில் கீழமை நீதிமன்றங்களில் வரும் 28-ம் தேதி முதல் நேரடி வழக்கு விசாரணை குறைந்தபட்ச வழக்குகளோடு நடத்தலாம். நிலுவையில் உள்ள பழைய வழக்குகள் மற்றும் கால நிர்ணயம் செய்யப்பட்ட வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இருதரப்பிலும் தயாராக உள்ள வழக்குகளை மட்டுமே விசாரிக்க வேண்டும்.

அடுத்த மாதம் 4-ஆம் தேதி வரை சாட்சிகள் விசாரணை செய்யக் கூடாது என்று தெரிவித்துள்ள தலைமை பதிவாளர் நீதிமன்றத்துக்கு வரக்கூடிய வழக்கறிஞர்கள் அவர்கள் ஆஜராக கூடிய வழக்குகளுக்கு மட்டுமே வர வேண்டும் என்றும் தேவையற்ற கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா தொற்று அதிகம் உள்ள கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி ஈரோடு உள்ளிட்ட மாவட்ட நீதிபதிகள் அந்தந்த மாவட்டங்களில் கொரோனா பரவலைக் கருத்தில்கொண்டு, நீதிமன்றங்களைத் திறப்பது குறித்து உரிய முடிவு எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற ஊழியர்கள் 75 சதவீதம் பேர், சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மாவட்ட நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்துவது குறித்து மாவட்ட தலைமை நீதிபதி அனைத்து கொரானா தடுப்பு விதிகளையும் பின்பற்றி உரிய அனுமதி அளித்துக் கொள்ளலாம்

சென்னை உயர்நீதிமன்றத்தைப் பொறுத்தவரை ஆன்லைன் வழக்கு விசாரணை முறையைத் தொடரும் என்றும் , திங்கட்கிழமை முதல் மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகலாம் என்று தலைமை பதிவாளர் தனபால் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!