முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை

 






வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் 9 சிங்கங்களுக்கு கடந்த வாரத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதில், பெண் சிங்கம் ஒன்று உயிரிழந்தது. இதையடுத்து, நீலகிரி மாவட்டம், முதுமலையில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் தீவிர கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2 நாட்களுக்கு முன்பு நேரில் ஆய்வு செய்த காப்பகத்தின் கள இயக்குநர் கவுசல், யானைகளுக்கான உணவு வழங்குவதற்கான நேரத்தை அதிகரித்து உத்தரவிட்டார்.

யானைகளுக்கு தனித்தனியாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யானைப் பாகன்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்குள்ள 28 யானைகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சளி மற்றும் ஆசன வாயு மாதிரிகள் இன்று காலை எடுக்கப்பட்டன. வாழைத்தோட்டம் பகுதியில் கடந்த மாதத்தில் பிடிக்கப்பட்ட ரிவால்டோ யானைக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த மாதிரிகள் விமானம் மூலம், உத்தரப்பிரதேசத்தில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பப்படுகிறது. பரிசோதனை முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)