இன்று மேலும் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்... யாருக்கு எந்தப் பணி.. முழு தகவல்

 


சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 46 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 26 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய பதவிகளுக்கு புதிய ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஜூன் 2ஆம் தேதி 49 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து நேற்று 46 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று மேலும் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில்: R பொன்னி - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி & சுஜித் குமார்- மாநில போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு சிஐடி எஸ்பி M துரை- போலீஸ் தலைமையக துறை தலைமையக உதவி ஐஜி & G சம்பத்குமார்- சென்னை, போலீஸ் நலத்துறை உதவி ஐஜி S சாந்தி - மாநில மனித உரிமை ஆணைய எஸ்பி & D மகேஷ்குமார் - மதுவிலக்கு பிரிவு சேலம் மண்டல எஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, தீபா சத்யன்- சென்னை, ரயில்வே எஸ்பி & P பெருமாள் - சென்னை, அமலாக்கப்பிரிவு எஸ்பி R சிவக்குமார் - தமிழ்நாடு போலீஸ் அகாடமி எஸ்பி & K சுகுமாரன்- கடலோர பாதுகாப்பு அமலாக்கப்பிரிவு எஸ்பி D சண்முக பிரியா - சைபர் க்ரைம் பிரிவு எஸ்பி & G சுப்புலட்சுமி - குற்ற விசாரணை பிரிவு எஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

D அசோக்குமார்- அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு எஸ்பி & R பாண்டிய ராஜன்- தமிழ்நாடு சிறப்புப் போலீசின் 7ஆவது பட்டாலியன் கமாண்டன்ட் M பாஸ்கரன்- சிவில் சப்ளை எஸ்பி & M கிங்ஸ்லின்- குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு எஸ்பி K அதிவீர பாண்டியன்- திருச்சி ரயில்வே எஸ்பி & P K ராதாகிருஷ்ணன் - தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 5வது பட்டாலியன் கமாண்டன்ட் RK பெத்துவிஜயன் - மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறை எஸ்பி & K குணசேகரன்- நாகை, கடலோர பாதுகாப்பு குழும எஸ்பி ஆக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் M சந்திரசேகரன் - தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 15வது பட்டாலியன் கமாண்டன்ட் & A தங்கவேலு - சென்னை, பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி K பழனிக்குமார்- சென்னை, வணிக குற்ற விசாரணை பிரிவு எஸ்பி & K ஸ்டாலின் - சென்னை, சிவில் சப்ளை சிஐடிப்பிரிவு எஸ்பி T P சுரேஷ் குமார் - சென்னை, தமிழக சிறப்பு போலீஸ் 13வது பட்டாலியன் கமாண்டன்ட் & T செந்தில்குமார் - டில்லி தமிழக சிறப்பு போலீஸ், 8 வது பட்டாலியன் கமாண்டன்ட் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்