வடபழனி கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி சொத்துக்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு

 சென்னை சாலிகிராமத்தில் வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான 5.5 ஏக்கர் நிலம் தனியாரால் ஆக்ரமிக்கப்பட்டு வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அதிகாரிகளுடன் ஆக்ரமிப்பு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்த இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு 48 மணி நேரத்திற்குள் கோவில் நிலத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் அத்தனையும் அகற்ற உத்தரவிட்டார். இதேபோல் அந்த பகுதியில் கடந்த முறை திமுக ஆட்சியில் கட்டப்பட்டு தற்போது பயன்படுத்தப்படாமல் இருக்கும் பணிபுரியும் பெண்களுக்கான விடுதி சீரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என உறுதியளித்தார்.


இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்நித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, தமிழகம் முழுவதும் கோயில் சொத்துக்களை ஆக்ரமிப்பு செய்திருப்பவர்கள் தாங்களாகவே விலக வேண்டும். கோயில் சொத்துக்களை ஆக்ரமித்து திருக்கோயில் வருமானத்திற்கு தடையாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்ததான மீட்கப்பட்ட நிலம் ஏழை எளியோருக்கு பயன்படும் வகையில் பயன்படுத்தப்படும். கோயில் நிலங்களை யாரும் உரிமை கொண்டாட முடியாது. வீடற்று கோவில் நிலங்களில் நீண்ட நாட்களாக குடியிருந்து வருபவர்கள் கூட வாடகை தாரர்களாக மட்டுமே கருதப்படுவார்கள்.


தமிழகத்தில் பாஜக என்ற கட்சி இருக்கிறது என்பதை விளம்பரப்படுத்திக்கொள்ள திமுக-வை விமர்சிக்கிறார்கள். எனினும் எதிர் தரப்பில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் நல்ல நோக்கத்துடன் கூறும் கருத்துக்களை ஏற்று செயல்படுத்துவோம் என்றார்.


மேலும், கடந்த கால தவறுகளை கிளறினாள் நாட்களும் நேரமும் போதாது அத்தனை மோசடி நடந்திருக்கிறது. தற்போது மக்கள் நலனில் கவனம் செலுத்திவருகிறோம் ஆனாலும் தவறு செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆட்சி பொறுப்பேற்று 30 நாட்களில் முதல்வரின் சாதனை வெறும் ட்ரைலர் மட்டுமே.. மெயின் பிக்சரை இனிதான் பார்க்கப்போகிறீர்கள் என்றார்.

அமைச்சர் அனைத்து சாதியினறும் அர்ச்சகர் ஆகலாம் எனும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிமுக படுத்திய திட்டதை தற்போது செயல்படுத்துவீர்களா என செய்தியாளர்கள் முன்வைத்த கேள்விக்கு பதிலளித்த அவர், 100 நாட்களில் முதல்வரின் செயல்பாடுகளில் உங்கள் அத்தனை கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் என்றார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்