1ம் தேதி முதல் ஆம்னி பேருந்து சேவைகள் தொடக்கம் : ஆயத்தமாகும் பேருந்து ஊழியர்கள்

 


சென்னை ; கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளின் சேவை வரும் 1ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 36 ஆயிரமாக இருந்த கொரோனா தொற்று தற்போது 6 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது. தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால், மாவட்டங்களை 3 வகையாக பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட 11 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் பொது போக்குவரத்து தொடங்கி விட்டது.

அதே போன்று தனியார் மற்றும் ஆம்னி பேருந்து சேவைகள் தொடங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆம்னி பேருந்து சேவை ஜூலை 1ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 மாதங்களாக 4 ஆயிரத்திற்கும் மேலான ஆம்னி பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பேருந்து சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்