16வது சட்டமன்ற முதல் கூட்டத் தொடர் நாளை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.

 


தமிழநாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், 133 சட்டமன்ற உறுப்பினர்களுடன் வெற்றி மகுடம் சூடியது தி.மு.க .தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு, பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், 16 ஆவது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் நாளை ஆளுநர் உரையுடன் தொடங்கிறது.

கொரோனா தொற்று பரவல் இருப்பதால் பிரம்மாண்ட இடத்தைக் கொண்ட கலைவாணர் அரங்கத்தின் 3வது மாடியில் உள்ள அரங்கத்தில் சட்டமன்ற கூட்டத் தொடர் நடத்தப்படுகிறது.

சட்டமன்றம் நாளை காலை 10 மணிக்கு தொடங்கும். முன்னதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சபாநாயகர் மு.அப்பாவு, சட்டபேரவை செயலாளர் கி.சீனிவாசன் ஆகியோர் சட்டமன்ற மரபுப்படி பேரவைக்குள் அழைத்து வருவார்கள்.

ஆளுநர் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தத் தொடங்குவார். சுமார் ஒரு மணிநேரம் உரை நிகழ்த்துவார். அதன் பின்னர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆங்கிலத்தில் நிகழ்த்திய உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் மு.அப்பாவு வாசிப்பார். அதன் பின்னர் சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூடும். அதில், சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்பது பற்றி முடிவு செய்யப்படும்.

எத்தனை நாட்கள் நடைப்பெறுகிறதோ, அந்த அடிப்படையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும், அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசிய பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆளுநர் உரையின் மீது தனது கருத்தை பதிவு செய்வார். இறுதியாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு சட்டப்பேரவை நிறைவடையும்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய ஆட்சியில் , தமிழக சட்டப்பேரவையில் இந்த முறை 8 கட்சிகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது . அனைவரும் சமம் என்ற தி.மு.கவின் குரல் தமிழக சட்டசபையில் எதிரோலிக்கும்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)