கொரோனா தொற்று : இன்று 15,108 பேர் பாதிப்பு.. 27,463 பேர் டிஸ்சார்ஜ்!

 
தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் விளைவாக கடந்த 3 வாரங்களாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா பாதிப்பு 15 ஆயிரமாகப் பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறையின் மாநில கட்டுப்பாட்டு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் இன்று 15,108 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,39,705 ஆக உள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 1,73,724 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 2,90,36,960 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இன்று கோவை மாவட்டத்தில் 1,982 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 1,353 பேருக்கும், சென்னையில் 989 பேருக்கும்,கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 27,463 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 21,48,352 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 1,62,073 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 374 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 130 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 244 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், கொரோனா உயிரிழப்பு 29,280 ஆக உள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா