இந்திய அம்பேத்கர் மாணவர்கள் சங்கம் 100க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கினார்கள்.கரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கடந்து சில நாட்களாகக் குறைந்துவருகிறது. இந்த நிலையில், கரோனா இரண்டாவது அலையில் இதுவரை கொரோனா ஊரடங்கு காலத்தில் உணவுக்கு சிரமப்பட்டு வரும் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகின்றது இந்நிலையில் வெள்ளிக்கிழ‌மை இன்று 

இந்திய அம்பேத்கர் மாணவர்கள் சங்கம் கௌரவ தலைமை ஆலோசகர் முன்னாள் நீதிபதி மற்றும் கௌரவ ஆலோசகர் டாக்டர்.புதிய செல்வம்  அவர்களின் வழிகாட்டுதலின்படி நிறுவனத் தலைவர் பி.பிரசாந்த் மற்றும் மாநில பொதுச் செயலாளர் பி.பிரவின்குமார் அவர்களின் ஆலோசனைபடி சங்கத்தின் சார்பாக மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் திரு.ஞானசேகர் சென்னை 

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் சேர்ந்து இன்று சென்னை அடுத்த கோவளம் அருகில் பேரூர் கிராமத்தைச் சேர்ந்த இருளர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு இன்று மதியம் 100க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கினார்கள்.