காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை எதிர்வரும் 10ஆம் தேதி நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு

 

 


காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை எதிர்வரும் 10ஆம் தேதி நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு செய்ய இருப்பதாக கும்பகோணம் அருகே திருபுவனத்தில் அரசு கொறடா கோவி செழியன் தகவல். 

திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் பட்டு கைத்தறி நெசவாளர் பஜனை மடத்திற்கு கலைஞர் பிறந்த தினத்தையொட்டி கோவி.செழியன் தனது சொந்த நிதியில் இருந்து UPS மற்றும் பேட்டரியை வழங்கினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அரசு தலைமை கொறடா கோவி செழியன் ,

ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருப்பது காவிரி டெல்டா பாசன விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்து உள்ளது என்றும், உரிய காலத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளதை தொடர்ந்து விவசாயிகளுக்கு தேவையான நெல் விதைகள் , உரம் உள்ளிட்ட அனைத்து வேளாண் இடு பொருட்களும் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ,இம் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் நடைபெற்றுவரும் தூர்வாரும்பணிகள் விரைந்து முடிக்கும் வகையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும்,

தூர்வாரும் பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் எதிர்வரும் 10ஆம் தேதி காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் வருகை தர இருப்பதாகவும் கோவி.செழியன் மேலும் தெரிவித்தார்.-செய்தியாளர்:

விக்னேஷ்,கும்பகோணம்

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்