கும்பகோணம் பகுதியில் காய்கறி லாரியில் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கடத்தி வந்த மூவரை 3 கைது

 


கும்பகோணம் பகுதியில் காய்கறி லாரியில் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கடத்தி வந்த மூவரை 3 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர் 1616 மதுபாட்டில்கள் பறிமுதல். கும்பகோணத்தில் கொரோனா தொற்று பரவலின் காரணமாக தமிழகத்தில் கடந்த மாதம் முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது

இதன் காரணமாக அரசு மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ள நிலையில் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறிகளுடன் மதுபாட்டில்களை கடத்தி வருவது கடந்த சில நாட்களாக தொடர் கதையாக உள்ளது.


இந்நிலையில் தாராசுரம் பகுதியில் கும்பகோணம் டு தஞ்சாவூர் சாலையில் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .

இன்று மாலை அப்பகுதியில் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவுபடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், தனிப்படை உதவிஆய்வாளர் கீர்த்திவாசன் தலைமையில் காவல்துறையினர் கும்பகோணம் புறவழிச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஈச்சர் லாரி  நிற்காமல் சென்றதால் அதை 3 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று அசூர் புறவழிச் சாலையில் 


காவல்துறையினர்  மடக்கிப் பிடித்தனர். வாகனத்தை சோதனையிட்ட போது அதில் காய்கறி மூட்டைகளுடன் 

10 லட்ச ரூபாய் மதிப்புள்ள 1616 கர்நாடகா மாநில மது பாட்டில்கள் இருந்தன. அவைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.


மேலும் வாகனத்தை ஓட்டிவந்த டிரைவர் உட்பட  3 நபர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த முருகையா கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மதுரை பகுதியைச் சேர்ந்த காமேஷ் குமார் என்பது தெரியவந்தது.

மேலும் லாரி பொறையாறு பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்