1 கோடி பணம் பெற்று மோசடி செய்த நடிகர் RK.சுரேஷ்” : தொழிலதிபரின் மனைவி புகார்!
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வீணா, கணவர் ராமமூர்த்தி. இவர் எர்த்மூவர்ஸ் என்ற பெயரில் கனரக வாகனங்கள் வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 2018ம் ஆண்டு சென்னையில் உள்ள கமலக்கண்ணன் என்பவரை சந்தித்துள்ளனர். அப்போது அவர் 10 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக இவர்களிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, திரைப்பட நடிகர் ஆர்.கே. சுரேஷை, கமலக்கண்ணன் வீணா மற்றும் ராமமூர்த்திக்கு அறிமுகம் செய்துள்ளார். ஆர்.கே.சுரேஷ் தனக்கு தெரிந்த வங்கி மேலாளர் மூலமாக கடன் பெற்று வருவதாகவும், இதற்கு கமிஷனாக ஒரு கோடி தரவேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பி ராமமூர்த்தி ஆர்.கே.சுரேஷ் வங்கி கணக்கில் ரூபாய் 93 லட்சமும், நேரடியாக ரூபாய் 7 லட்சம் என ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.
அதன் பிறகு இருவரையும் வளசரவாக்கத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ஆர்.கே.சுரேஷ் மற்றும் கமலக்கண்ணன் அழைத்து சென்று, அங்கு வங்கி மேலாளர் முன்னிலையில் பல ஆவணங்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர். அப்போது, நிரப்பப்படாத காசோலைகளிலும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் இவர்களிடம் கையெழுத்து வாங்கியுள்ளார். இதையடுத்து வங்கி வங்கி மேளாளர் சக்திவேல் 10 கோடி ருபாய் கடன் தொகையை உங்கள் வங்கி கணக்கில் வரும் என கூறி அவர்களை அனுப்பிவைத்துள்ளார். ஆனால் அவர்களின் வங்கி கணக்கிற்கு10 கோடி ரூபாய் வரவில்லை.
இது குறித்து ஆர்.கே.சுரேஷ்யை வீணாவும், ராமமூர்த்தியும் அணுகிய போது, அவர் மிரட்டும் தோணியில் பணம் தரமுடியாது உன்னால் முடிந்ததைப் பார்த்து கொள் என கூறியுள்ளார். அப்போது தான் இவர்களுக்கு நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஏமாற்றியது தெரியவந்தது.
மேலும், நடிகர் ஆர்.கே.சுரேஷ் தனது வீட்டை எங்கள் பெயருக்கு ஓர் விற்பனை பத்திரம் பதிவு செய்து அதை வங்கியில் வைத்து பணத்தைப் பெற்றுக்கொண்டு எங்களை ஏமாற்றியது தெரியவந்தது. இதனால் மன உளைச்சல் எற்பட்டு கணவர் ராமமூர்த்தி இறந்துள்ளார்.
பின்னர் வீணா, எங்களுக்கு தரவேண்டிய ஒரு கோடி ரூபாய் பணத்தை கேட்டு பலமுறை ஆர்.கே.சுரேஷ்யை அணுகியுள்ளார். அப்போது எல்லாம், நடிகர் ஆர்.கே.சுரேஷ் உன்னையும், மகன்களையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். மேலும் விழுப்புரத்தில் உள்ள அவரது அடியாட்களை வைத்து மிரட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் மனமுடைந்த வீணா, 10 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறி ஒரு கோடி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக நடிகர் ஆர்.கே. சுரேஷ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் ஆர்.கே.சுரேஷ் மீது நடவடிக்கை எடுத்து ஒரு கோடி ரூபாயை மீட்டு தரவேண்டும் எனவும் அந்த புகார் மனுவில் வீணா வலியுறுத்தியுள்ளார்.