இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடங்கிய DYFI அமைப்பினர்” : குவியும் பாராட்டு!

 


தமிழகத்தில் கொரனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் முழுவதும் நிரம்பி ஆக்சிஜன், வென்டிலேட்டர், படுக்கைகள் இல்லாமல் நோயாளிகள் தவிர்த்து வருகின்றனர்

இதனால் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட பிற நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த குறையை தீர்ப்பதற்காக சென்னை ஆர்.கே.நகர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆக்சிஜன் வசதியுடன் இலவச ஆம்புலன்ஸ் ஆட்டோ, கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் ஆட்டோ, ரத்த தானம் செய்வதற்கும் மற்றும் மருத்துவ உதவிகளுக்காக ஆட்டோ சேவை தொடங்கியுள்ளனர்.

மேலும், இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவைக்கு 8508698507, 9940568563, 95001364994, என்ற எண்ணை தொடர்பு கொண்டால் 24மணி நேரமும் இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இந்த ஆட்டோ சேவையை ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் கொடியசைத்து துவக்கி வைத்தார். மக்களின் துயரங்களை அறித்து இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை துவக்கியுள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)