மின்சார வாரிய தொமுச சார்பில் உணவு வழங்கப்பட்டது.

 தமிழ்நாட்டில் இரண்டாம் அலை கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டு வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான பொது மக்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் பொதுமக்களுக்கு முகக்கவசம், சானிடைசர், கபசுர குடிநீர் வழங்கி வருகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக திருப்பூரில் மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் செயலாளர் அ. சரவணன் ஏற்பாட்டில் திருப்பூா் பகுதியிலுள்ள பிச்சம் பாளையம்,  போயம்பாயையம், சக்திநகர், பழனிச்சாமி நகர், பூலுவப்பட்டி  , பாண்டியன் நகர், அண்ணா நகர், உள்ளிட்ட இடங்களிலுள்ள துப்புறவு தொழிலாளர்கள்,  காவல் துறையினர்கள், மின்சார வாரிய ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், பனியன் தொழிலாளர்கள், பொது மக்கள் என 500 க்கும் மேற்பட்டோருக்கு மதியம்  சிக்கன் பிரியாணி,  தக்காளி சாதம் உள்ளிட்ட உணவுகளை வழங்கி, இலவசமாக முகக்கவசம், குடிநீர், சானிடைசர் உள்ளிட்டவைகளை செயலாளர் ஈ.பி. அ.சரவணன் வழங்கினார். இதில் மின்சார வாரிய தொமுச ஆர் கே நகர் ஜோதிபாசு, திமுகழக நிர்வாகி பிச்சம் பாளையம் சில்வர் சரவணன், சின்னதுரை, ஆட்டோ மதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.