ஒரகடம்: போதைக்கு தின்னரில் எலுமிச்சைப் பழச்சாறு கலந்து குடித்த நபர் பலி

 


ஒரகடம் அருகே குன்னவாக்கம் பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வருபவர் சங்கர். தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் அனைத்து வகையான மதுக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் போதைக்காக கடந்த மூன்று நாட்களாகவே சங்கர் பெயிண்டில் கலக்கும் தின்னர் என்கின்ற ரசாயனத்தில் எலுமிச்சை பழச்சாறை பிழிந்து குடித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று போதைக்காக தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சிவசங்கரன், சுரேஷ், கிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து கூட்டாக எலுமிச்சை பழச்சாறு பிழிந்து தின்னரைக் குடித்து உள்ளனர்.

இதில் சங்கருக்கு வலிப்பு ஏற்பட உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மேலும் கிருஷ்ணன் மற்றும் சிவசங்கர் ஆகியோரையும் மருத்துவமனை அனுமதித்துள்ளனர். இதில் சிவசங்கர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்.

இவர்களுடன் சேர்ந்து ரசாயனத்தை குடித்த மற்றொரு நபரான சுரேஷ் என்ன ஆனார் என்பது கிராம மக்களுக்கு தெரியவில்லை. அவரை வயக்காட்டில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவே அவரைக் காவல்துறையினர் தற்போது தேடி வருகின்றனர். மேலும் இதுகுறித்து ஒரகடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
‘நீ செத்துப் போ.. நா வீடியோ எடுக்கற’ : மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்ததை வீடியோ எடுத்த கணவன்!!!
Image
சிக்னலில் நின்ற பெண்ணிடம் பணம் கேட்ட திருநங்கை: தர மறுத்ததால் ஆபாச பேச்சு…முகம் சுழிக்க வைத்த செயல்..!!
Image
தி.மு.க மூத்த தலைவரை பொதுவெளியில் விமர்சித்த நிதி அமைச்சர் #PTR - உச்சக்கட்டத்தில் உட்கட்சி பூசல்! https://kathir.news/news/-ptr--1204682
Image
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட அவரது ஆதரவாளர்கள் 11 பேர் மீது வழக்கு
Image