விவசாயியை அடித்து உதைத்த திமுக நிர்வாகி : அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

 


தூத்துக்குடி மாவட்டம் முக்காணி அடுத்த உமரிக்காட்டை சேர்ந்தவர் எஸ்ஆர்எஸ் உமரிசங்கர். இவர் திமுகவின் மாநில மாணவரணி துணை செயலாளராக பொறுப்பில் உள்ளார்.

கடந்த 20ந் தேதி வியாழக்கிழமை உமரி சங்கர் தனது விவசாய நிலத்தை தனது மனைவியின் அண்ணானான பிரபாகரரிடம் குத்தகைக்கு கொடுத்து உள்ளார்.

இதற்காக பிரபாகர் குத்தகை பணத்தை ஏற்கனவே உமரிசங்கருக்கு கொடுத்து விட்டாராம். ஆனால் கூடுதலாக பணம் கேட்டு தன் அடி ஆட்களுடன் பிரபாகர் வீட்டில் போய்மிரட்டி உள்ளார்
தற்போது அதன் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . திமுக உமரி சங்கர் மீது ஏற்கனவே பல வழக்கு உள்ளது.

உமரிக்காட்டில் நடந்த இந்த சம்பவத்தில் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணனின் ஆதரவாளரான உமரிசங்கர் தனது மைத்துனரை கடுமையாக தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சமீபத்தில் ஆறுமுகநேரியில் திமுகவின் கிராம சபை கூட்டம் நடந்தது.. இதில் கலந்து கொண்ட உமரிசங்கர் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து பேசியது போல தெரிகிறது.. அதாவது யாருக்காவது தைரியம் இருந்தால், என் ஊருக்கு வந்து பாருங்க என்ற ரீதியில் சவால் விடுத்து பேசியதாகவும் சொல்லப்படுகிறது.

உமரிக்காட்டில் நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே பல வழக்குகள் இருந்தாலும், தற்போது திமுக ஆட்சியில் உள்ளதால் உமரிசங்கர் மீது எந்த வழக்கும் பதிய வாய்ப்பில்லை என்றும், இனி இதுபோன்ற சம்பவங்கள் தூத்துக்குடியில் அதிகம் நடைபெறும் என்றும் மக்கள் குமுறுகின்றனர். மைத்துனருக்கே இந்த கதி என்றால் சாமானியனுக்கு எந்த மாதிரியான நிலை ஏற்படும் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்