சாதாரண தொற்று அறிகுறி இருந்தாலே பொதுமக்கள் இதனை தேடி செல்வதை தவிர்க்க வேண்டும்.! அமைச்சர் மா. சுப்பிரமணியம் வேண்டுகோள்.!


 சாதாரண தொற்று அறிகுறி இருந்தாலே ஆக்சிஜன் படுக்கை வசதி, ரெம்டெசிவர் போன்றவற்றை தேடி செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலைக் கல்லூரியில் சித்தா கோவிட் சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியம் பேசும்போது சித்தா கோவிட் சிகிச்சை மையம் இன்று தொடங்கப்பட்டு உள்ளது என்றும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் வழங்கிய அறிவுரையின் படி கொரோனாவிற்கு சித்தா, யுனானி ஆகிய சிகிச்சைகளை அளிக்க வேண்டும் என்றிருந்தார்.

அதன்படி அம்பேத்கர் கலை கல்லூரியில் 240 படுக்கைகளுடன் கூடிய இந்த மையத்தில் 195 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், தமிழகத்தில் தற்போது 12 இடங்களில் இதுபோன்ற மையங்கள் செயலப்பட்டு வருவதாகவும், இன்னும் 1 வாரத்திற்குள் கூடுதலாக 12 மையங்கள் திறக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

தமிழகத்தை பொறுத்தவரை, ஏராளமானோர் மருத்துவமனைகளுக்கு வரும் நிலை இருக்கும் காரணத்தாலும், பொதுமக்கள் ஆக்சிஜன் படுக்கை வசதிகளே வேண்டும் என்ற எண்ணத்தோடும் மருத்துவமனைக்கு வந்து குவிவதாகவும் தெரிவித்தார்.

அதனை கட்டுப்படுத்தும் வகையில், குறைவான அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இதுபோன்ற சித்தா சிகிச்சை மையங்கள் மீண்டும் தொடங்கப்படுவதாகவும், இங்கு கபசுர குடிநீர், கற்பூராதி தைலம் உள்ளிட்ட மருந்துகள் மற்றும் சிறப்பு பாரம்பரிய உணவுகள் அவர்களுக்கு வழங்கப்படுவதாகவும், மெலும் யோகா, மூலிகை சிகிச்சை, மனநிலை ஆலோசனை உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது என்றார்.

அதேபோல் ஏ.எம் ஜெயின் கல்லூரியில் 70 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை மையம் அடுத்த வாரத்தில் தொடங்கப்பட உள்ளதாக கூறிய அமைச்சர், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் நாளை முதல் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும், அவர்கள் எங்கு ஆய்வு மேற்கொண்டார்கள் என்பது குறித்து மாலை பத்திரிகை செய்தியாக அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி ஏற்கனவே சென்னையில் 21 ஸ்கிரீனிங் சென்டர்கள் உள்ள நிலையில், பொதுமக்கள் தேவையினை கருத்தில் கொண்டு அதனை 30 ஸ்கிரீனிங் சென்டர்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.அதேபோல் தொற்று அறிகுறி இருந்தாலே ஆக்சிஜன் படுக்கை வசதி, ரெம்டெசிவர் போன்றவற்றை தேடி செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்