வெற்றி பெற்றதாக அறிவிக்காதது ஏன்? அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி

 தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி நேற்று தொடங்கியது. 234 தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடும் விராலிமலை தொகுதியில்  குளறுபடி நடைபெறுவதாக புகார் தெரிவித்து வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. விராலிமலை தொகுதியில் இரவு முழுவதும் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கயைில் 17,000 வாக்குகள் எண்ணப்பட உள்ளநிலையில் விஜயபாஸ்கர் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளதால் அவரது வெற்றி உறுதியாகி உள்ளது.இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதல் சுற்றிலேயே இரண்டாயிரம் வாக்குகள் பெற்று அபரிவிதமாக வருபவர்களில் தேர்தல் முடிவை 
தேர்தல் ஆணையம் விரைந்து அறிவிக்க வேண்டும் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கையில் உள்ளேன். ஜனநாயக முறைப்படி நேர்மையாக அறிவிக்கப்பட வேண்டிய முடிவை அறிவிக்க மறுக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் மொத்தமாக அனைத்து தொகுதிகளுக்கும் முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்கு மேலாகியும் 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இருக்கும் என்னை வெற்றி பெற்றதாக அறிவிக்காதது ஏன்?

எள்ளளவு கூட அதிமுகவினர் எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படவில்லை என்ற எங்களது கருத்தை ஆழமாக தெரிவிக்கின்றோம். உடனடியாக தனது வெற்றியை அறிவித்து வெற்றி சான்றிதழை வழங்க வேண்டும். அதுதான் நியாயம், அதுதான் நேர்மை என தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்துகிறேன் என்றுள்ளார்.
Popular posts
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image
நடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க!”
Image
மாடு வெட்டக் கூடாது, 50 பேருக்கு மேல் கூட கூடாது - பக்ரீத் கொண்டாட கட்டுப்பாடுகள்
Image
600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி!
Image
சர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Image