மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் மருந்துகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

 


மாறிக்கொண்டே இருக்கும் உணவுமுறையாலும் வாழ்க்கைமுறையாலும் நம்மில் பெரும்பாலானோருக்கு தலைவலி, கால்வலி, வாய்வுகோளாறு, நெஞ்சுக்கரிப்பு, மூட்டுவலி என ஏதேனும் ஒரு பிரச்சினை இருந்துக்கொண்டே தான் இருக்கிறது.


தினமும் உடலில் ஏற்படும் ஒரு பிரச்சினைகளுக்கு எல்லாம் நாம் மருத்துவரிடம் செல்வதில்லை. சிலர் மட்டுமே மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்ற பின்னர் மருந்துகளை வாங்கி எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், பலரும் அவர்களே நேரடியாக மருந்துக் கடைக்குச் சென்று உடலில் உள்ள பிரச்சனையைச் சொல்லி மருந்தை வாங்கி சாப்பிடுகிறார்கள்.
ஆனால் அது சரியான முறையா? அப்படியே எடுத்துக்கொண்டாலும் அந்த மருந்தைப் பற்றி நாம் தெரிந்துக்கொள்கிறோமா? என்றால் இல்லை என்பதுதான் நிறைய பேரின் பதிலாக இருக்கும்.

முக்கியமாக நாமாக மருந்தகங்களுக்குச் சென்று மருந்து வாங்கும்போது சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். மருந்து அட்டைக்குப் பின் என்ன இருக்கிறது என்பதை நாம் அதிகம் பார்ப்பதே இல்லை. மருந்து அட்டையின் பின்புறத்தில் பல குறியீடுகளின் உள்ளன, அதை பற்றி நாம் தெரிந்துக்கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும்.
அதுவும் இந்த கொரோனா சமயத்தில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சு பிரச்சினை, உடல் சோர்வு, செரிமான பிரச்சினை, பசியின்மை என எல்லாமே அறிகுறிகளாக சொல்லிவிட்ட பின்பு எது கொரோனா தொற்று நோய் எது சாதாரண பிரச்சினை என்றே தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

கொரோனோவின் இரண்டாவது அலை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தீவிரமடைந்து கொண்டே போகும் இந்த சூழ்நிலையில், மருந்து வாங்கும்போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும். முடிந்தவரை மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் மருந்துகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருந்தாலும், ஒரு மருத்துவரால் முழுமையாக பரிசோதனை செய்த பின்னரே மாத்திரைகள் எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

மருத்துவரிடம் ஆலோசிக்காமல் அவசரத்திற்கு ஒரு மருந்துக் கடையில் நீங்கள் வாங்கும் மருந்து என்றாலும், முதலில் மருந்து அட்டையைச் சரிபார்க்கவும். அதன் காலாவதி தேதியைச் சரிபார்க்க வேண்டும்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)