கார்களை இலவசமாக மருத்துவ சேவைக்கு வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!


 மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு உயர்ந்து வருவதால், பெரும்பாலான ஆம்புலன்ஸ்கள் கொரோனா நோயாளிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனால் மகப்பேறு மற்றும் விபத்தில் படுகாயம் அடைந்தோர் என பிற மருத்துவ சேவை தேவைப்படுவோருக்கு இலவச ஆம்புலன்ஸ் வசதி  கிடைக்க தாமதம் ஏற்படுகிறது.  இந்நிலையில் மயிலாடுதுறை  அரசு மருத்துவமனைக்கு  பிரசவம், விபத்து மற்றும் மகப்பேறு முடிந்து  தாய்,சேய்   ஆகியோரை எவ்வித கட்டணமும் இல்லாமல் வீட்டிற்கு அழைத்து செல்ல ஊரடங்கு நாட்களில் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள இரண்டு கார்களை விஜய் மக்கள் இயக்கத்தினர்  மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினர்.

விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர் குட்டிகோபி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  தலைமை மருத்துவர் ராஜசேகரிடம்  இரண்டு கார்களையும் விஜய் ரசிகர்கள்  ஒப்படைத்தனர். மயிலாடுதுறை மற்றும் மணல்மேடு பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் 30 கிலோமீட்டர் வரை இந்த இரண்டு கார்களை பயன்படுத்தி உடனடி மருத்துவ சேவை பெறலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும்,  இந்த  இரண்டு கார்களுக்கும் விஜய் மக்கள் இயக்கத்தினரே ஓட்டுனர்களாக  இருந்து  இன்றிலிருந்து மருத்துவமனைக்கு உதவி புரிந்து வருகின்றனர். இலவச கார் வசதியை பெற 9943021003 என்ற தொடர்பு என்னை பயன்படுத்திக்கொள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் சேவையை  கொரோனா காலத்திலும் தன்னலம் பார்க்காமல் இலவசமாக வழங்கி வரும் விஜய் மன்ற இயக்கத்தினரின் செயலுக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்