தீவிர வாகன சோதனையில் இன்‌‌‌ஸ்‌‌‌பெக்‌‌‌டர்‌‌‌ பத்‌‌‌மா


 கன்னியாகுமரி மாவட்டம், கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசின் உத்தரவு படி முழு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் தேவயில்லாமல் வெளியே வருவதை தடுக்கவும், ஆங்காங்கே கூட்டம் சேருவதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் மாவட்‌‌‌ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு பத்‌‌‌ரிநாரயணன்‌‌‌ I.P.S அவர்கள் மாவட்டத்தில் ஒவ்வொரு இடங்களுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஊரடங்கு வீதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார்.

அதன்படி இன்று போலீசார் தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிபவர்கள், முகக்கவசம், சமூக இடைவெளி இன்றி இருப்போர் வாகனங்களில் விதிமுறைகள் மீறிய குற்றங்கள் என அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இதில் மாவட்டத்திற்கு வெளியே மற்றும் உள்ளே ஒரு பகுதியில் இருந்து மற்று பகுதிக்கு வர கண்டிப்பாக இ- பதிவு செய்திருக்க வேண்டும். அதனை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு நாட்களில் மட்டும் ஊரடங்கு விதிகளை மீறியதாக 3910 வழக்குகள் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.