அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை பரபரப்பு புகார்

 


அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை ஏமாற்றி விட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் துணை நடிகை சாந்தினி புகார் அளித்துள்ளார். மலேசியாவை சேர்ந்த நடிகை சாந்தினி, ‘நாடோடிகள்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஏமாற்றிவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன், ஜெயலலிதா ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடனான மோதல் போக்கால் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அப்போது முதல் அரசியலில் மணிகண்டன் அரசியலில் ஓரங்கட்டப்பட்டார். 

இந்நிலையில் தன்னுடன் 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்யாமல் மணிகண்டன் ஏமாற்றுவதாக நடிகை சாந்தினி புகார் அளித்துள்ளார்.

“முன்னாள் அமைச்சரான மணிகண்டன், என்னை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு, பின்னர் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து 5 ஆண்டுகளாக தொடர்பில் இருந்து வருகிறார்.

தற்போது திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தினால், அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் கூலிப்படையை வைத்து கொலை செய்துவிடுவேன் என்றும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மிரட்டுகிறார்” சாந்தினி குற்றம் சாட்டியுள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)