கும்பகோணம் அருகே கள்ளபுளியூர் சாலையில் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்தில் கணவன் மனைவி பலி ஒருவர் காயம்

 

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பகுதியை சேர்ந்த சோமு இவரது மனைவி மீனா இருவரும் கும்பகோணம் பாலக்கரை தனியார் ஹோட்டலில் வேலை செய்து வருகிறார்கள் இந்நிலையில் பந்தநல்லூர் இலிருந்து ஹோட்டலுக்கு தன் மருமகனுடன் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு வந்து கொண்டிருந்த போது சென்னை சாலையில் கள்ளப்புலியூர் என்ற இடத்தில் கார் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த போது கள்ளபுளியூர் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தின் மீது காரும் நேருக்கு நேர் மோதி கொண்ட  விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த பந்தநல்லூரை சேர்ந்த சோமு (60) இவரது மனைவி மீனா (55)ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இவர்களது மருமகன் ரமேஷ் என்பவருக்கு பலத்த காயம் அடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

சம்பவ இடத்தில் உயிரிழந்த இருவரது உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பாக  தாலுகா காவல் நிலையத்தார் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டுநர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

ஊரடங்கு நேரத்தில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.-செய்தியாளர்:

 விக்னேஷ,கும்பகோணம்