ஆம்பூரில் தொடரும் மரணங்கள்..


இன்று 4 மாற்று மத சகோதரர்களின் உடல்களை அடக்கம் செய்த தமுமுகவினர்...

ஆம்பூரில் கொரோனா தொற்றாலும், மூச்சு திணறல் பாதிப்பாலும் பலரும் இறந்து வரும் நிலையில்...

இன்று தொற்றால் இறந்த 4 மாற்று மத சகோதரர்களின் உடல்களை தமுமுக சகோதரர்கள் ஆம்பூர் A கஸ்பா இடுகாடு, வெங்கடசமுத்திரம் இடுகாடு மற்றும் பைபாஸ் பாலம் இடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர்...

இதில் பல சகோதரர்கள் *நோன்பு* வைத்து கொண்டு அடக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது...

இறைவன் இப்பணியில் ஈடுபடும் அனைத்து சகோதரர்களுக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தை வழங்குவானாக...

இந்த கொடுந்தொற்றில் இருந்து நம் அனைவரையும் பாதுகாப்பானாக...

தொற்று அறிகுறி இருந்தாலே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுப்போம்...

கொரோனாவை வேரிலேயே அறுப்போம்...