பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்

 


விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒட்டனந்தல் என்கின்ற கிராமத்தில் பஞ்சாயத்து என்ற முறையில் காலில் விழ சொல்லி மன்னிப்பு கேட்க வைத்திருக்கிறார்கள்.

தாழ்த்தப்பட்ட பகுதியில் பொதுமக்கள் பொதுமுடக்க காலத்தில் கோவில் திருவிழா செய்ததாக ஊர் மக்கள் முன்னிலையில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைக்கப்பட்ட சம்பவம். மனித உரிமை ஆணையம் விசாரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்..

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது ஒட்டனந்தல் கிராமம் இந்த கிராமத்தில் கடந்த 12ஆம் தேதி தாழ்த்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், மாரியம்மன் கோவில் திருவிழா ஒன்றை நடத்தியுள்ளனர்.  இதுதொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் ஊர் மக்களை அழைத்து அங்கு கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளை எல்லாம் எடுத்து சென்றுள்ளனர். அதன் பின்னர் காவல் நிலையத்தில் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு பொருட்களை மீட்டு வந்துள்ளனர்..

இந்த நிலையில் தங்களை மீறி திருவிழா நடத்தியதாக கூறி  தாழ்த்தப்பட்ட பகுதி மக்களை அழைத்து வரச் சொல்லி அவர்களை காலில் விழுந்து ஊர் மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கட்டளையிட்டு உள்ளனர்.  அதன்படியே அந்த கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த திருமால், சந்தானம், ஆறுமுகம் ஆகியோர் ஊர்மக்கள் முன்னிலையில் காலில் விழுந்து வணங்கியுள்ளனர்.

இது தொடர்பான படக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்