`ஆக்ஸிஜன் படுக்கை' கிடைக்காமல் நோயாளிகள் தவிப்பு: அரசின் கவனத்துக்கு மாவட்ட நிர்வாகம் கொண்டு செல்ல எதிர்பார்ப்பு

 


சென்னையைப் போல் மதுரையிலும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் `ஆக்ஸிஜன் படுக்கை'கள் கிடைக்காமல் கரோனா நோயாளிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் செயல்படும் கரோனா சிகிச்சை மையம். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி மதுரை மாவட்டத்தில் தற்போது 4,500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 16 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பிற மாவட்டங்களில் பரிந்துரைக் கப்பட்ட நோயாளிகள் 374 பேர் கூடுதலாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.

இது தவிர வாடிப்பட்டி, திருப் பரங்குன்றம், திருமங்கலம், மேலூர் அரசு மருத்துவமனைகள் மற்றும் மதுரை ரயில்வே மருத்துவ மனையில் கரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங் கப்படுகிறது. மேலும், மதுரை காம ராசர் பல்கலைக்கழகம் உட்பட 11 கல்லூரிகளில் தற்காலிக சிகிச்சை மையங்கள் அமைத்து அங்கும் அறிகுறியில்லாத கரோனா நோயா ளிகள் அனுமதிக்கப் படுகின்றனர்.

ஆனால், அரசு ராஜாஜி மருத்துவமனையில் 1,100 ஆக்சிஜன் படுக்கைகளும், தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் 110 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளன. இந்நிலையில், மாவட்டத்தின் பிற மருத்துவமனைகளில் தீவிரத் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்குப் பரிந்துரைக் கப்படுகின்றனர். தற்போது இந்தப் படுக்கைகள் முழுவதுமாக நிரம்பிவிட்டன. அதனால், ஆக்சி ஜன் தேவைப்படும் தீவிரமான கரோனா நோய் பாதிப்புள்ள நோயாளிகள் படுக்கை வசதியின்றி தவிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கடந்த வாரம் முதலே நோயாளிகள் படுக்கை வசதியில்லாமல் திரும்பும் நிலையில் தற்போது அரசு மருத்துவமனையிலும் படுக்கை வசதியில்லாமல் எங்கு சிகிச்சை பெறுவது என மக்கள் தவிக்கின்றனர்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘‘அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள ஆக்சி ஜன் கொள்கலனுக்கு பாண்டிச்சேரி, மற்றும் கேரள மாநிலம் பாலக்கோடு பகுதிகளை சேர்ந்த அங்கீகாரம் பெற்ற தனியார் முகவர் மூலம் ஆக்சிஜன் லாரிகளில் வந்து இறக்கப்படுகிறது.

தற்போது ஆக்சிஜன் படுக்கை யின் தேவை அதிகரித்துள்ளதால் ஒரு நாள் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டாலும் நோயாளிகள் அபாயக் கட்டத்தை அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், தினமும் தட்டுப்பாடின்றி ஆக்சி ஜன் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

கடந்த சில நாட்களாக மதுரையில் கரோனா தொற்று அதிகரிப்பும், `ஆக்சிஜன் படுக்கை' பற்றாக்குறையும் ஏற்படத் தொடங்கியுள்ளது. சென்னையைப் போல் மாறுவதற்குள் மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் துரிதமாக கரோனா நோயாளி களுக்கு சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசின் கவனத்துக்கு மதுரையின் நிலையும், தேவையையும் உடனுக் குடன் கொண்டு சென்று அதை நிவர்த்தி செய்ய வேண்டும்,’’ என்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)