பத்திரிகையாளர்களுக்கு எதிராக மிகவும் கீழ்தரமாக பதிவிட்டுவரும் மாரிதாஸ் மீது காவல்துறை உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

 


பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதற்கு மாரிதாஸ் போன்ற யூடியூப் சேனல்களை நடத்தும் சில நபர்களை வலதுசாரி அமைப்புகள் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் மூலம் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அவதூறு பரப்பும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பத்திரிகையாளர்களுக்கு எதிராக அடிப்படை ஆதாரமற்ற பல பொய்களை வெளியிட்டான். இதை எதிர்த்து பத்திரிகையாளர்கள் தொடர்ந்த அவதூறு வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில், மாரிதாசுக்கு எதிராக காவல்துறையில் பத்திரிகையாளர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த புகாரை காவல்துறை அப்போது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்நிலையில், மாரிதாஸ் மீண்டும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக தற்போது மிகவும் கீழ்த்தரமாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் எழுதியுள்ளான். இந்த பதிவுகள் பத்திரிகையாளர் சமூகத்தையே தவறாக சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தப் பதிவுகள், பத்திரிகையாளர்களை மறைமுகமாக மிரட்டுவதாகவும் அமைந்துள்ளன.

ஆகவே, பத்திரிகையாளர்களுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதுடன், அவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் மாரிதாஸ்  மீது ஏற்கனவே கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

ஜனநாயகத்தின் அடிநாதமான பத்திரிகை துறையும் அதில் பணியாற்றும் பத்திரிகையாளர்களும்,சமூக விரோதிகளுடன் கைகோர்த்துக்கொண்டு, பத்திரிகையாளர்களுக்கு எதிராக பரப்பிய அவதூறும், அதன் காரணமாக தற்போது பத்திரிகையாளர்களுக்கு எதிராக மீண்டும் அவதூறு பிரச்சாரத்தை சாதிவெறிக் கும்பல் கையில் எடுத்துள்ளது.அவதூறு பரப்பிவரும் சமூக விரோதிகள் மீது  தமிழக அரசும், காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்று  தமிழ்நாடு பிரஸ்& மீடியா ரிப்போர்ட்டர் யூனியன் வலியுறுத்துகிறது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்