தொடர்ந்து ஊரட‌ங்கு காலத்தில் திருப்பூர் மின்சார வாரிய தொமுச சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகின்றது.

 



கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரட‌ங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமென திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலினின் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.

அதன்படி திருப்பூரில் மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் பொது மக்களுக்கு உணவு உள்ளிட்ட பல்வேறு நிவாரண பணிகளை திருப்பூரில் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள், ஏழை, எளிய, அடித்தட்டு மக்கள், வயதானவர்கள், உணவுக்கு வழியில்லாதவர்களுக்காக மின்சார வாரிய தொமுச சார்பில் செயலாளர் ஈ.பி. அ. சரவணன் உணவு வழங்கி வருகிறார். இது தொடர்பாக அவர் கூறுகையி்ல் எவ்வித தடையின்றி ஏழை, எளிய, வயதான, அடித்தட்டு மக்களுக்கு உணவு வழங்குவதற்கு உண்டான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சாப்பாட்டுக்கே சிரமப்படும் ஏழை எளிய மக்கள் யார் வேண்டுமானாலும் 9344617449  இந்த எண்ணில் தொடர்புக் கொண்டால் உணவு வழங்கப்படும் திருப்பூரில் யாரும் பசியோடு இருக்க கூடாது என்பதே எங்களின் நோக்கம் என்று அவர் கூறினார். 

இந்நிலையில் இன்று 27-05-2021 வியாழக்கிழமை திருப்பூர் பிச்சம் பாளையம்,  போயம்பாயையம், சக்திநகர், பழனிச்சாமி நகர், பூலுவப்பட்டி  , பாண்டியன் நகர், அண்ணா நகர், கூத்தம் பாளையம், கணக்கம் பாளையம் உள்ளிட்ட இடங்களிலுள்ள துப்புறவு தொழிலாளர்கள், காவல் துறையினர்கள், மின்சார வாரிய ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், பனியன் தொழிலாளர்கள், பொது மக்கள் என 400 க்கும் மேற்பட்டோருக்கு மதியம்  வெஜிடபிள் பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வழங்கி, இலவசமாக முகக்கவசம், குடிநீர், சானிடைசர் உள்ளிட்டவைகளை செயலாளர் ஈ.பி. அ.சரவணன் வழங்கினார். இதில் மின்சார வாரிய தொமுச ஆர் கே நகர் ஜோதிபாசு, திமுகழக நிர்வாகி பிச்சம்பாளையம் சில்வர் சரவணன், சின்னதுரை, ஆட்டோ மன்மதன், பழனிச்சாமி நகர் ராஜேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)