காயல் நகர பொது மக்கள் முக கவசம் , சமூக இடை வெளியை பின் பற்ற வேண்டும் : காயல் அப்பாஸ் வேண்டு கோள் !

 


தூத்துக்குடி மாவட்டம்,  காயல் பட்டிணம் நகர பொது மக்கள் முக கவசம் சமூக இடை வெளியை பின் பற்ற வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வேண்டு கோள் விடுத்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .  

தமிழகத்தில் இரண்டாம் அலையாக கொரோனா என்கிற கொடிய வைரஸ் தொற்றுனால் மக்கள் பெரும் அளவில் பாதிக்க பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமாக உள்ளன. மேலும் இந்த கொரோனா தொற்றுவை தடுத்து  மக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு கட்டு பாடுகளுடன் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை போட்டுள்ளது. தமிழக அரசு  போட பட்ட ஊரடங்கு உத்தரவுக்கு காயல் நகர பொது மக்கள் முழு ஓத்துழைப்பு வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக கேட்டு கொள்கிறோம். 

மக்களுக்கு தினசரி தேவையான அத்தியாவாசிய பொருட்கள் வாங்குவதற்கு தமிழகம் முழுவதும் காலை 6 முதல் காலை 10 வரையிலும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை  ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வரவேற்கிறது .

காயல் நகரத்தில் கொரோனா தொற்றுவினால் தொடர்ந்து மக்கள் பாதிக்க பட்டு உயிரிழந்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது . மேலும் காயல் நகர பொது மக்கள் அத்தியவாசிய பொருட்கள் வாங்குவதற்கு வரும் ஓரு சிலர் முக கவசம் அணியாமலும் சமூக இடை வெளியை பின் பற்றாமல்  மார்க்கெட்டில் கூட்ட கூட்டமாக நின்று அத்தியாவாசிய  பொருட்கள் வாங்குவதுனால் அருகில் உள்ள மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது . ஆகயினால் அத்தியவாசிய பொருட்கள் வாங்க வெளியில் செல்லுபவர்கள் முக கவசம் அணிந்து , சமூக இடை வெளியை பின் பற்ற வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக கேட்டு கொள்கிறோம். 

எனவே : முக கவசம் அணியாமலும் , சமூக இடை வெளியை பின் பற்றாதவர்கள் மீது கூடுதல் அபதாரம் விதித்து சட்ட ரிதியாக கடுமையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்