முதல்வர் ஸ்டாலின், காப்பீடு திட்டத்தின் தொடர்பான அட்டை இல்லாவிட்டாலும், தனியார் மருத்துவமனைகளில் மக்கள் கொரோனாவுக்கு இலவச சிகிச்சையை பெற்றுக்கொள்ள முடியும்

 


காப்பீடு திட்டம் தொடர்பான அட்டை இல்லாவிட்டாலும், தனியார் மருத்துவமனைகளில் மக்கள் கொரோனாவுக்கு இலவச சிகிச்சையை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த பாடில்லை. இதன் பாதிப்பு காரணமாக மருத்துவமனைகள் முன் நோயாளிகள் அணிவகுத்து வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இதனால் சிலர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டியிருந்தது. ஆனால் இந்த இக்கட்டான நிலையை பயன்படுத்திக்கொண்டு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் கூறப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா நோயாளிகள் இலவச சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும் என உத்தரவு பிறப்பித்தார். இதனால் சிலர் பயனடைந்த போதும், மேலும் சிலர் காப்பீடு அட்டை இல்லாவிட்டால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், அரசின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை இல்லை என்றாலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டருப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தேனியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, முதல்வரின் அதிரடி நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று 20 சதவீதமாக குறைந்துள்ளது. காப்பீடு திட்ட அட்டை இல்லை என்றாலும் சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. குடும்பத்தில் யாரேனும் ஒருவர் மருத்துவப் அட்டை பெற்று வழங்கினால் போதும் என்று கூறியுள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு