உதவி கேட்கும் மக்களுக்கு உதவும் காவலர்கள்.... கடலூரில் எஸ்.பி க்கு குவியும் பாராட்டுகள்..

 


கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தொற்றை முற்றிலும் தடுக்க தமிழக அரசு சார்பில் பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது ஒரு வாரத்திறக்கு முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்து கொண்டுள்ளனர். இருப்பினும் கடலூர் மாவட்டத்தில் வீட்டில் தனியாக வசிக்கும் முதியோர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் அல்லது உணவு இல்லாமல் பலர் இருப்பதை உணர்ந்த கடலூர் மாவட்ட எஸ்.பி ஶ்ரீஅபநவ் அவர்களுக்கு உதவும் வகையில் கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் வயதான முதியோர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளின் நலன் கருதி, கொரானா ஊரடங்கு காலகட்டத்தில் உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டால் மாவட்ட காவல் அலுவலகம் தொலைபேசி எண் 04142- 284350, 284345 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டால் காவல்துறை சார்பில் உதவிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் நேற்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 10 க்கு மேற்பட்டோர் உதவி கேட்டு தொலைபேசியில் அழைத்துள்ளனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி எம். ஆர். கே .நகர் பகுதியைச் சார்ந்த முருகவேல் என்பவர் உணவு இல்லாமல் கஷ்டப்படுவதாக தெரிவித்ததுள்ளார். உடனே காவலர்கள் முருகவேல் வீட்டிறக்கு சென்று 3 வேலை உணவு வழங்க உதவினர்.

பின்னர் கடலூர் திருப்பாபுலியூர் பகுதியை சேர்நத அமுதா வயது 50 உடல் ஊனமுற்றவர் என்பவர் மளிகை பொருட்கள் இல்லாமல் கஷ்டபடுவதாக தெரிவித்தார். உடனே காவலர்கள் அமுதா அவர்களின் வீட்டிறக்கு சென்று ஒரு வாரத்திறக்கான மளிகை பொருட்களை வாங்கி கொடுத்தனர்.

இதே போல் கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியை சேர்ந்த ஶ்ரீதரன் - ஜோதி வயது 60 உடைய தம்பதியானர் (இருவரும் சர்க்கரை நோயாளிகள் ) இருவரும் மருந்துகள் வாங்க முடியாமல் உள்ளதாக தெரிவித்தனர். உடனே அங்கு சென்ற உதவி ஆய்வாளர் மருந்து மாத்திரைகளை வாங்கி கொடுத்தார்.

மேலும் திட்டக்குடி பகுதியை சேர்நத சக்திவேல் வயது 44, வீட்டில் சமையல் செய்ய எதுவம் இல்லை என கூறியுள்ளார். உடனே காவலரகள் சென்று அவர்கள் வீட்டிற்கு தேவையான மளிகை, காய்கறிகளை வழங்கினர். கடலூர் மாவட்ட எஸ்.பி.ஶ்ரீஅபிநவ் அவர்களின் இந்த முயற்சசிக்கு பொதுமக்கள் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
நிர்வாணப்படுத்தி டான்ஸ் ஆடச்சொல்லி மிரட்டிய பெண் காவல் ஆய்வாளர்... இந்தக் கொடுமை எங்கு தெரியுமா?
Image
ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளுக்கு புதிய காவல் ஆணையர்கள் நியமனம் : தமிழக அரசு அறிவிப்பு!!
Image
வாட்ஸ் அப் தகவல்கள் திருடப்படுகிறதா ?அந்நிறுவனத்திடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு
Image
மயானத்தில் சடலத்தின் மீது அமர்ந்து ‘நான் கடவுள்’ பாணியில் காசி அகோரிகள் நடத்திய சடங்கு : பீதியை கிளப்பிய விநோத பூஜை!!
Image