புதிய வாகனங்களை மாவட்ட எஸ்.பி ஆய்வு செய்‌‌‌தார்‌‌‌-அதன் சாவியை ஓட்டுனர்களிடம் மாவட்‌‌‌ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு ஜெயக்‌‌‌குமார்‌‌‌ வழங்கினார்.

 


தமிழக அரசு தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்கு ரூபாய் 23 லட்சம் மதிப்புள்ள நெடுஞ்சாலை ரோந்துப்பணிக்கு வழங்கியுள்ள 3 புதிய போலீரோ ஜீப்களை, அதன் பயன்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்து, அதன் சாவியை ஓட்டுனர்களிடம் மாவட்‌‌‌ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு ஜெயக்‌‌‌குமார்‌‌‌ வழங்கி சிறப்பாக பணியாற்றுமாறு அறிவுரை வழங்கினார்.

தமிழக அரசு தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு ரூபாய் 22,50,000/- மதிப்புள்ள 3 புதிய போலீரோ ஜீப்களை வழங்கியுள்ளது. மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு மேற்படி புதிய ஜீப்களை முத்தையாபுரம், புதுக்கோட்டை மற்றும் செய்துங்கநல்லூர் ஆகிய 3 நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் பணிக்கு ஒதுக்கீடு செய்து, அதன் சாவிகளை அந்தந்த வாகன ஓட்டுனர்களுக்கு வழங்கி, சிறந்த முறையில் பராமரிக்கப்படவேண்டும் என்றும், பொதுமக்களுக்கு உதவும் வகையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலை ரோந்துப் போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

முத்தையாபுரம் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் முத்தையாபுரத்திலிருந்து ஆத்தூர் வரையிலும், புதுக்கோட்டை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் 3வது மைலிலிருந்து வசவப்பபுரம் வரையிலும், மற்றொன்று செய்துங்கநல்லூரிலிருந்து திருச்செந்தூர் வரையிலும் நெடுஞ்சாலையில் ரோந்துப்பணி மேற்கொள்வார்கள். இவர்கள் மேற்படி நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படாமல் தடுத்தல், விபத்து ஏற்பட்டவர்களுக்கு முதலுதவிகள் செய்தல், நெடுஞ்சாலையில் குற்றங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுதல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள்.

இதில் தூத்துக்குடி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் செந்தாமரைக் கண்ணன், மோட்டார் வாகனப்பரிவு உதவி ஆய்வாளர் செல்வக்குமார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீசார் உடனிருந்தனர்.

Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
‘நீ செத்துப் போ.. நா வீடியோ எடுக்கற’ : மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்ததை வீடியோ எடுத்த கணவன்!!!
Image
சிக்னலில் நின்ற பெண்ணிடம் பணம் கேட்ட திருநங்கை: தர மறுத்ததால் ஆபாச பேச்சு…முகம் சுழிக்க வைத்த செயல்..!!
Image
தி.மு.க மூத்த தலைவரை பொதுவெளியில் விமர்சித்த நிதி அமைச்சர் #PTR - உச்சக்கட்டத்தில் உட்கட்சி பூசல்! https://kathir.news/news/-ptr--1204682
Image
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட அவரது ஆதரவாளர்கள் 11 பேர் மீது வழக்கு
Image