தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை மாவட்ட எஸ்.பி இன்று திறந்து வைத்தார்

 


தூத்துக்குடி ரோட்டரி கிளப் மற்றும் ஜெயா இன்ஜினியரிங் சார்பாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டு வி.வி.டி. சிக்னல் மற்றும் குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பு ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட வாட்டர் பியூரிஃபையர் இயந்திரத்தை மாவட்‌‌‌ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

முழு ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே சோதனை நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் மிக முக்கிய சந்திப்புகளான வி.வி.டி சிக்னல் மற்றும் குரூஸ்பானாந்து சிலை சந்திப்புகளில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு உதவும் வகையில் தூத்துக்குடி ரோட்டரி கிளப் மற்றும் ஜெயா இன்ஜினியரிங் சார்பாக வழங்கப்பட்ட வாட்டர் பியூரிஃபையர் இயந்திரத்தை மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் வழங்கப்பட்ட காலால் மிதித்து இயக்கக்கூடிய கிருமி நாசினி தெளிப்பான் மற்றும் வெப்பப் பரிசோதனை கருவி ஆகியவற்றையும் பார்வையிட்டார்.

இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி ரோட்டரி சங்கத் தலைவர். ஜூடு, செயலாளர் மகாலிங்கம், திரு. முத்துராமன், ஜெயா இன்ஜினியரிங் எலையன்ஸ் ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

இதில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன், வடபாகம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் வேல்ராஜ் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!