எண்ணி மிகவும் வேதனை அடைகிறேன்" - ஒய்.ஜி.மகேந்திரன்
இணைய வழி வகுப்பில் பள்ளி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சில மோசமான குற்றச்சாட்டுகள், தவறான நடவடிக்கை தொடர்பான விவரங்கள் கவனத்திற்கு வந்துள்ளதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என பள்ளி நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.
இது குறித்து பத்மா சேஷாத்ரி பள்ளியின் அறங்காவலர் குழுவை சார்ந்த ஒய்.ஜி.மகேந்திரன் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
“ஆசிரியரின் செயலை எண்ணி நான் மிகவும் வேதனை அடைகிறேன். எனது தாயார் மாணவர்களின் கல்வி கனவுகளை நிறைவேற்றும் நோக்கில் இந்த பள்ளியை நிறுவினார். இது மாதிரியான செயல்கள் அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கிறது.
எனக்கு இந்த விவகாரம் தெரியவந்ததும் பள்ளியின் தலைவர் மற்றும் முதல்வருக்கு நள்ளிரவு நேரத்திலேயே மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன். அதில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன்.
தற்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது. அந்த ஆசிரியரிடம் விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி உள்ளது” என அவர் புதிய தலைமுறையிடம் தெரிவித்துள்ளார்.