அமைச்சர்களுக்கு அரசு பங்களா ஒதுக்கீடு... ஓபிஎஸ் வசித்த வந்த வீடு அன்பில் மகேஷூக்கு ஒதுக்கீடு

 


சென்னை கிரீன்வேஸ் சாலையில், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு 76 பங்களாக்களை அரசு கட்டியுள்ளது. ஒவ்வொரு பங்களாவும் 10 கிரவுண்டுக்கு மேலான நிலப்பரப்பில், 5,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. சபாநாயகருக்கான பங்களா மட்டும் 1 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. பங்களாக்களில் அமைச்சர்களுக்கு இலவச மின்சாரம், குடிநீர், தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த பங்களாக்களை பொதுப்பணி துறை பராமரித்து வருகிறது. இந்த பங்களாக்களில் எந்தவொரு மராமத்து பணிகளாக இருந்தாலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், அதை உடனடியாக அரசு செலவில் சீரமைத்து கொடுப்பார்கள். குறிஞ்சி, முல்லை, பொதிகை, வைகை, என ஒவ்வொரு பங்களாவுக்கு தனி தனிப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின் புதிய அமைச்சர்களுக்கு  பங்களாக்களை ஒதுக்கீடு பணியை பொதுப்பணி துறையினர் மேற்கொண்டனர். அதன்படி தற்போது அரசு பங்களாக்கள் அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் சபாநாயகர் தனபால் வசித்த பங்களா தற்போதைய சபாநாயகர் அப்பாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வசித்து வந்த பங்களா பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷூக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராக இருப்பதால் தற்போது வசிக்கும் பங்களாவில் அவர் தொடர்ந்து வசிப்பார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இருந்த பங்களாவில் ஐ.பெரியசாமி இனி தங்குவார்.

மேலும் சில அமைச்சர்கள் பங்களாக்களை காலி செய்யாமல் இருக்கின்றனர். இதனால் ஒரிரு வாரங்களில் மற்ற அமைச்சர்களுக்கும் பங்களாக்களை ஒதுக்கும் பணியை பொதுப்பணி துறை அதிகாரிகள் மேற்கொள்வார்கள். சென்னையில் வசிக்கும் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மா.சுப்ரமணியம் ஆகியோருக்கும் பங்களாக்கள் ஒதுக்கப்படவில்லை. அவர்களுக்கு சென்னையில் சொந்த வீடு இருப்பதால் அவர்கள் தேவைக்கு ஏற்ப பங்களாக்கள் ஒதுக்கப்படும் என்று தகவல் தெரவித்துள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)