எஸ்.பி மாவட்டம் முழுவதும் தீவிர ஆய்வு

 


மயிலாடுதுறை மாவட்‌‌‌ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு ஞீநாதா IPS , புதுப்பட்டினம் காவல் நிலையம் பழையார் கிராமத்தில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு அங்கிருந்த ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற பெருந்தலைவர், வார்டு உருப்பினர்கள் மற்றும் பொது மக்களிடம் கொரானா பரவலை தடுக்கும் வகையில் செயல்படுத்தப்படும் நடைமுறைகளை கேட்டறிந்து பின்னர் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு கடைகளுக்கு சென்று கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் அவர்களுக்கு தேவைபடும் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாகனங்கள் மூலமாக வீடு வீடாக சென்று கொடுப்பதற்கு அறிவுரை வழங்கியும், அந்த வாகன போக்குவரத்திற்கு தக்க போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்

பின்னர் சாலையோரங்களில் கூட்டமாக விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களுக்கு கொரானா பரவல் சம்பந்தமாக அறிவுரை வழங்கி பொது வெளியில் சுற்றாமல் இருக்க கேட்டுக்கொண்டார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு