மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர்ராஜகோபாலன் கைது!

 


பத்மா சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் ரீதியான நோக்கத்தில் குறுஞ்செய்தி அனுப்பிய குற்றத்திற்காக போலீசார் இந்த குற்றச்சாட்டில் சம்மந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் பள்ளியில் இதே போன்ற செயலில் ஈடுபட்டுவரும் மேலும் சிலர் இருப்பதாக ராஜகோபாலன் திடுக் தகவல் அளித்துள்ளார் என தெரிகிறது

கடந்த ஐந்து ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக குறுஞ்செய்திகளை அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பள்ளி மாணவிகளுக்கு அனுப்பிய ஆபாச படம், குறுஞ்செய்திகளை நீக்கியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் நீக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மீண்டும் எடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

பின்புலம்...

சென்னை கே.கே.நகரில் பத்மா சேஷாத்ரி என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு 12ஆம் வகுப்புக்கு வணிகவியல் ஆசிரியராக பணியாற்றிவரும் ராஜகோபாலன் மீது, அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்கள், அங்கு பயின்ற மாணவிகள். மாணவிகளிடம் தவறாகப் பேசியது, தீய நோக்கத்துடன் தொடுதலில் ஈடுபட்டது, ஆன்லைன் வகுப்புகளில் அறைகுறை ஆடை அணிந்து வந்தது என இவர் மீதான குற்றச்சாட்டுகளின் பட்டியல் நீள்கின்றன.

இதனிடையே, மாணவிகளின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அவர் ஆபாச குறுச்செய்திகளை அனுப்பியதாக கூறப்படும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் ராஜகோபாலன் மீது முன்னாள் மாணவ-மாணவிகள் ஏற்கனவே புகார் அளித்த நிலையில், அதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இவ்விவகாரம் விஸ்வரூபமெடுத்த நிலையில், விசாரணை நடத்துவதற்காக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால், பள்ளி நிர்வாகத்தினர் அவரை விசாரணைக்கு அனுமதிக்கவில்லை.

அதேபோல் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த பள்ளி நிர்வாகம் தரப்பில் ஒத்துழைப்பு அளிக்கப்பட்டவில்லை என காவல்துறை தெரிவித்தது. இதையடுத்து, ராஜகோபாலனை காவல்நிலையம் அழைத்துச் சென்ற அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆசிரியர் மீதான புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர்ராஜகோபாலன் கைது!

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)