பாதுகாப்பு கொடுக்க சொன்ன ஸ்டாலின்… அழகிரி சொன்ன பதிலால் அதிர்ந்த அதிகாரி

 


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அண்ணன் மு.க.ஸ்டாலினுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க சொல்லியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது மதுரையில் வசித்து வந்த  அவரது மூத்த மகன் மு.க.அழகிரிக்கு பாதுகாப்பு அதிகாரியாக எஸ்.ஐ.ஸ்டாலின் என்பவர் நியமிக்கப்பட்டார். அதன்பின் 2009 ஆம் ஆண்டு அவர் மத்திய அமைச்சராக பதவி வகித்தபோது போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இதற்கிடையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இதனை முன்னிட்டு மதுரையில் உள்ள அண்ணன் அழகிரி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கச்சொல்லி வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக  மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா மு.க.அழகிரியை தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது  தம்பி பதவியேற்கட்டும் அதன் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று மு.க.அழகிரி கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.