தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ஊருக்குள் அனுமதி: ஊராட்சி நிர்வாகம் அதிரடி!

 


தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் தினசரி கொரோனா எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கு மேல் பதிவாகி வரும் நிலையில், கொரோனா சங்கிலியை உடைக்கும் விதத்தில் வரும் 31ம் தேதிவரை கடும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை, கறிக்கடை உட்பட அனைத்து கடைகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களுக்கும் மட்டும்  கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ள நிலையில், காய்கறிகள் அரசு சார்பில் வாகனங்கள் மூலம் வீதி வீதியாக கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகிறது. இதற்காக காய்கறி வியாபாரிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில்,  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள புதுக்கோட்டை கிராமத்தில்   சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.  இதனையடுத்து புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சிமன்ற நிர்வாகத்தின்  முயற்சியால் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக  இந்த ஊராட்சிக்கு செல்லும் பாதையில் செக்போஸ்ட் அமைத்து, ஊருக்குள் வெளிநபர்களை அனுமதிக்காமல்,  பால், காய்கறி , பூ வியாபாரம் செய்பவர்களை மட்டுமே அனுமதித்து வருகின்றனர். மேலும் ஊருக்குள் வருபவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பிறகே ஊருக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)