சமூகவலைதளத்தில் வருவதையெல்லாம் சுயமாக பின்பற்றாதீர்கள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

 


ராஜா ராணி, மான் கராத்தே, மரகத நாணயம், க/பெ.ரணசிங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் அருண்ராஜா காமராஜ், பீட்சா, ஜிகர்தண்டா, காக்கி சட்டை, தெறி, கபாலி, காலா, மாஸ்டர், தர்பார் போன்ற பல படங்களில் பாடலாசிரியராகவும், பாடகராகவும் பணியாற்றியிருக்கிறார்.


நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அவர், சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் 2018-ல் வெளிவந்த கனா படத்தில் இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ’ஆர்டிக்கிள் 15’ படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறார். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்.
பொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் முகநூல் மற்றும் சமூகவலைதளங்களில் வருகின்ற புகைப்போடுதல் என்ற ஒன்றை சுயமாக எடுத்துக்கொள்ள கூடாது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ கொரோனா நோய்த்தொற்றுக்கு அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பொது மக்கள் தாங்களாகவே சுய வைத்தியம் என்ற பெயரில் சிகிச்சை எடுத்துக்கொள்வது மிகவும் தவறாகும். அவ்வாறான சிகிச்சை முறைகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அழுத்தமான காற்று புகை போடுதல் என்ற ஒன்று தற்போது பொதுமக்களிடையே பரவி வருகிறது. இந்த புகை போடுதல் மூலம் அழுத்தமான காற்று அவர்களின் வாய் வழியே சென்று அவர்களின் நுரையீரலை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இது மருத்துவ நெறிமுறைகளின் படி இதனை மருத்துவ சிகிச்சையாக கருத முடியாது. நோய் தொற்று ஏற்பட்டவுடன் பொதுமக்கள் தாங்களாகவே வீட்டுமுறை வைத்தியம் செய்வதை விட்டு மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகம் முழுவதும் கோவிட் நோயாளிகளுக்காக சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்த கோவிட் வைரஸ் என்பது புதுமையான நோயாகவும் இது நேரடியாக நுரையீரலை பாதிக்கும் தன்மை உடையதாக இருப்பதாலும் மருத்துவருடைய அறிவுரை இல்லாமல் புகை போடுதல் என்பதை பயன்படுத்தக்கூடாது.

சித்தா கோவிட் கேர் மையத்தில் பயன்படுத்தப்படும் மருத்துவ முறையானது மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் மாநில அரசு மருத்துவ குழு ஒன்று அமைத்து அதன் வழிகாட்டுதலின்படி உள் மருந்து மற்றும் பிற மருத்துவ முறைகளை கூறியுள்ளது. எனவே பொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் முகநூல்கள் மற்றும் சமூகவலைதளங்களில் வருகின்ற புகை போடுதல் என்ற ஒன்றை சுயமாக எடுத்துக்கொள்ள கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
நிர்வாணப்படுத்தி டான்ஸ் ஆடச்சொல்லி மிரட்டிய பெண் காவல் ஆய்வாளர்... இந்தக் கொடுமை எங்கு தெரியுமா?
Image
ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளுக்கு புதிய காவல் ஆணையர்கள் நியமனம் : தமிழக அரசு அறிவிப்பு!!
Image
வாட்ஸ் அப் தகவல்கள் திருடப்படுகிறதா ?அந்நிறுவனத்திடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு
Image
மயானத்தில் சடலத்தின் மீது அமர்ந்து ‘நான் கடவுள்’ பாணியில் காசி அகோரிகள் நடத்திய சடங்கு : பீதியை கிளப்பிய விநோத பூஜை!!
Image