அமைச்சர் விழாவில் காற்றில் பறந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள்!

 


சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை  பெற்று வருகின்றனர்.  பலர் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கிடைக்காமல் தவித்துவருகின்றனர். நேற்று முதல் எல்லா ரேசன் கடைகளிலும் தமிழக அரசு சார்பில்  அரசி குடும்ப அட்டை தாரர்களுக்கு முதல் தவகையாக ரூ 2000 வழங்கும் நிகழ்ச்சி துவங்கிய நிலையில்  இன்று மீண்டும் காரைக்குடி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ரேசன் கடையில் அரிசி குடும்ப அட்டைதார்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி முதல் தவனை ரூ 2000 வழங்கும் நிகழ்ச்சியை  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன்  தொடங்கி வைத்தார்.


சிறிய இடத்தில் நடந்த அரசு விழாவில் அதிக அளவில் அதிகாரிகள், ,கட்சியினர் நெருக்கமாக கலந்து கொண்டனர்.   அரசு விழாவில் சொரோனா ஊரடங்கு கட்டுபாடுகள் காற்றில் பறந்து இதனால் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாய சூழல் ஏற்பட்டுள்ளது .கொரோனா பரவலை கட்டுப்படுத்த திமுக தலைவரும் முதல்வருமான மு.க  ஸ்டாலின் அமைச்சர்களுக்கும்  கட்சியினருக்கும் எவ்வளவோ அறிவுரைகள் கட்டுபாடுகள் விதித்தாலும் அதை கட்சியினர் பின்பற்றுவது இல்லை என்றே கூறலாம் அரசு விழாவிற்கு தேவையில்லாமல் யாரும் வர வேண்டாம் என கட்டுபடுத்த வேண்டிய அமைச்சரும் கட்சியினரை  கண்டிப்பதுஇல்லை . சிவகங்கை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்களில் கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் நிலையில் அதிக அளவில் கட்சியினர் அதிகாரிகளை கலந்து கொள்ளும் கூட்டம் , அரசு விழா நடத்துவது  தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காரைக்குடி செய்தியாளர் முத்துராமலிங்கம்

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)