தமிழக முதல்வராக பதவியேற்கும் தி மு க தலைவர் மு க. ஸ்டாலினுக்கு காயல் அப்பாஸ் வாழ்த்து !

 


தமிழக முதல்வராக பதவியேற்கும் தி மு க தலைவர் மு க . ஸ்டாலினுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் தலைவர் காயல் அப்பாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. 

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். மேலும் 10 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு தி மு க ஆட்சியைப் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 

 மேலும் ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வது. இஸ்லாமியர்களுக்கான இட ஓதுக்கீடு 3.5 % இருக்கிறது கூடுதலாக 10% இட ஓதுக்கிடு வழங்க வேண்டும். மேலும் CAA.NPR. NRC.போன்ற கருப்பு சட்டங்களுக்கு எதிராக சட்ட பேரவையில் தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் கேட்டு கொள்கிறோம்.

எனவே  : தி மு க தலைவர் மு க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான மதசார்ப்பற்ற முற்போக்கு கூட்டனியை அமோக வெற்றி பெற செய்த தமிழக வாக்காள பெரு மக்களுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)