விதிமுறைகளை மீறி சுற்றித் திரிந்தவர்களிடன் அபராதம் வசூல்!

 


திண்டுக்கல்லில் கொரோனா விதிமுறைகளை மீறி சுற்றித்திரிந்த 50-க்கும் மேற்பட்டோரிடம் காவல்துறையினர் அபராதம் வசூலித்துள்ளனர்.

தமிழகத்தில் இரண்டாம் கட்ட கொரோனா தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு வரும் 24-ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பகல் 12 மணி வரை மளிகை கடைகள் காய்கறிகள் விற்பனை செய்யலாம் என்றும் மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் தேவையில்லாமல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளது.


Also read... சமூக இடைவெளி இல்லாமல் செயல்பட்ட டீ கடைகளை மூட போலீசார் உத்தரவு...!

இந்நிலையில் இன்று திண்டுக்கல் மெயின் ரோடு, வெள்ளை விநாயகர் கோவில் அருகே எவ்வித காரணமும் இன்றி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்தவர்கள், முக கவசம் அணியாமல் வந்தவர்கள் என 50-க்கும் மேற்பட்டோரிடம் தலா ரூ 200 வீதம் போக்குவரத்து  காவல்துறையினர் அபராதம் வசூல் செய்தனர். மேலும் அவர்களை தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

செய்தியாளர் - சங்கர்