தமிழகத்தில் இ- பதிவு செய்ய என்னென்ன ஆவணங்கள் வேண்டும்? எத்தனை பேர் வாகனங்களில் செல்ல அனுமதி?

 




தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. மேலும் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையில் அத்தியாவசிய பணிகளுக்காக பயணம் மேற்கொள்ள இ பதிவு அவசியம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு பயணம் செய்யும் பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை (https://eregister.tnega.org) இணையதளத்தில் இ-பதிவு செய்து, இ-பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எவ்விதமான தடையின்றி, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ-பதிவு விண்ணப்பிப்பது எவ்வாறு.
https://eregister.tnega.org என்ற இணையதளத்தின் வாயிலான இ - பதிவு செய்துக்கொள்ளலாம்.

இந்த இணையதளத்தில் உள்நுழைந்தவுடன், இதில் நீங்களே எங்கே பயணம் செய்கிறீர்கள்? என ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும்.
இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும்

1. வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வருபவர்கள்

2. மற்றவர்கள்( மாவட்டத்திற்குள், மாவட்டங்களுக்கு நடுவில் மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குள் தனிநபர்கள் மேற்கொள்ளும் பயணப் பதிவுகள்)

மாவட்டத்திற்குள், மாவட்டங்களுக்கு இடையேயான பயணம் என்றால் இரண்டாது ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.

இ- பதிவுக்கு உள்நுழைவதற்கு உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களை சரியாக பதிவிடவும். பின்னர் உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதனை பதிவு செய்தவுடன். இ- பதிவு பக்கத்துக்கு செல்லும்.
இ-பதிவு


அங்கு இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும்

1 தனி நபர்/ குழு சாலை வழி பயணம்

2 தனி நபர்/ குழு ரயில்/ விமானம் வழி தமிழ்நாட்டின் உள் நுழைத்தல் .. நீங்கள் உங்களுக்கு தேவையானவற்றை தேர்வு செய்துக்கொள்ளலாம்

இதில் தனி நபர்/ குழு சாலை வழி பயணம் என்றால்

1. பைக்கில் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்..
2. கார்களில் 3 பேர் மட்டும் செல்ல அனுமதி
3. இறப்பு, திருமணம், முதியோர் பராமரிப்பு, மருத்துவ அவசரம் ஆகிய காரணங்கள் தவிர வேறு எதற்கும் அனுமதி கிடையாது
4. செல்பேசி எண், ஆதார் / பான் / ஏதேனும் அடையாளம் வழங்க வேண்டும்.
5. காரணத்திற்கான ஆவணத்தையும் சமர்பிக்க வேண்டும்.
இ-பதிவு


காரணம்

இறப்பு,
திருமணம்,
முதியோர் பராமரிப்பு,
மருத்துவ அவசரம்
இந்த நான்கு காரணங்களுக்கு மட்டுமே அனுமதி இவற்றில் உங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுக்க வேண்டும்

பயணம் எங்கு வரை

மாவட்டங்களுக்குள்
மாவட்டங்களுக்கிடையே
வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் நுழைவது. இவற்றில் உங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுக்க வேண்டும்

பயணத் தேதி, பயணக்காரணத்திற்கான ஆவணம் சமர்பிக்க வேண்டும். அந்த ஆவணமானது 1MB க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் பெயர்.

விண்ணப்பதாரர் அடையாள சான்று

ஆதார் கார்டு,
பான் கார்டு,
ஓட்டுநர் உரிமம்
குடும்ப அட்டை ( ரேஷன் கார்டு)
பாஸ்போர்ட்
இவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்பிக்க வேண்டும்

இந்த அடையாளச் சான்றுகளில் இருக்கும் எண்ணை பதிவு செய்யவேண்டும்

விண்ணப்பதாரருடன் சேர்த்து மொத்தம் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள், எந்த வாகனத்தில் பயணம் மேற்கொள்ளவுள்ளனர், வாகன எண் ஆகியவற்றை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். நீங்கள் சமர்பித்த ஆவணங்கள் சரியான இருந்தால் உங்களது இ-பதிவு வெற்றிகரமான முடிவடையும். நீங்கள் இந்த ஊரடங்கு காலத்தில் தடையின்றி உங்களை பயணத்தை தொடரலாம்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)