சென்னை மாநகராட்சி ஆணையரிடம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக முக்கியமாக தேவைப்படுவது ஆக்சிஜன் கருவிகள்.

தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில், அதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இதற்கிடையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கான சிகிச்சைக்காக ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு சென்னைக்குட்பட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சென்னை மாநகராட்சிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தலைமை செயலகத்தில் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் 20 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை (Oxygen Concentators) முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக வழங்கினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்